அமெரிக்காவில் தாக்கிய பாரிய சூறாவளிக்கு இதுவரைக்கும் 21 பேர் பலியாகினர்.மேலும் பல அமெரிக்காவில் மாகாணங்களில் கடந்த சில மாதகாலமாக பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இன் நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்கா தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த புயல் காற்று வீசியது.இதனால் உண்டான சூறாவளி காரணமாக ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னஸி, அயோவா, மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்கள் பெருமளவில் சேதத்துக்கு உற்பட்டது .

இதில் சுமார் 21 பேர் இதுவரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதற்கிடையில் வெள்ளி இரவு முதல் சனிக்கிழமை வரை தாக்கிய புயல்களினால் அலபாமா, மிஸ்ஸிஸிப்பி யில் மேலும் இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆர்கன்சாஸின் லிட்டில் ராக் அருகே 2,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சூறாவளியின் பாதையில் இருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.