இந்தியாவில் வாழும் மக்கள் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனர். காலை மற்றும் இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருளாக இட்லி மாறி உள்ளது.
இட்லி சாப்பிடுவதால், எளிதில் செரிமானமாவதோடு, உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் கொடுப்பதாக மருத்துவ ஆய்வு தகவல் தெரிவிக்கின்றன. தற்போது உலகம் முழுவதும் இட்லியை மக்கள் ஆர்வமாக சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.மேலும் உலக இட்லி தினம் என்று கடந்த மார்ச் 30ம் தேதி பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்
உடல் எடை குறைய உதவும்
இட்லி மாவில் கலோரிகள் குறைவாகவே இருக்கிறது. இதனால் இட்லி சாப்பிடுவதால் உடல் எடை குறைக்க மிகவும் உதவி செய்யும். இட்லியில் புரதம் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் காணப்படுவதனால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்கும்.பசி எனும் உணர்வும் கட்டுக்குள் இருக்கும்.
செரிமானத்திற்கு உதவும்
தினமும் இட்லி சாப்பிடுவதால், இட்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இட்லியில் நார்ச்சத்து மட்டுமல்லாமல், இரும்பு சத்தும் உள்ளது. இதனால், உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும். இட்லி மாவு புளிக்கவைக்கப்படும்போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்தும்.
புரதச்சத்துக்கு உதவும்
இருவகையான புரதங்கள் நம் உடலுக்கு தேவைப்படும். முதல் வகை புரதச்சத்து, விலங்கு இறைச்சியிலிருந்து கிடைக்கும். ஆனால், இட்லியில் இரண்டு வகையான புரதச்சத்து உள்ளது. அவை உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கும்.