எல்லோருக்கும் பிடித்த நடிகர் விஜய் இன்று இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக இணைந்து உள்ளார் என்பதில் ரசிகர்கள் ஆரவாரத்தில் உள்ளனர். ஏற்கனவே விஜய் ட்விட்டரில் கணக்கு வைத்திருந்தாலும் அதில் சிலவேளைகளில் ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே பதிவேற்றம் செய்வார். இருப்பினும் அந்த பதிவுகளுக்கு பல மில்லியன் கணக்கில் கமெண்ட்களும் லைக்குகளையும் அள்ளி குவிகிறது.

தற்போது லோகேஷ் இன் லியோ படத்தில் நடித்து வரும் விஜய் இன்று மாலை 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.விஜய்யின் அதிகாரபூர்வ இன்ஸ்டா கணக்கிற்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். தற்போது 99 நிமிடங்களில் 1 மில்லியன் என்ற மைல்கல்லை இது கடந்திருந்தது.
இதன் மூலமாக மிக வேகமாக 1மில்லியன் followers பெற்றதற்காக உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறார் விஜய்.
இதுவரை பிடிஎஸ் V – 43 நிமிடங்களிலும் , ஏஞ்சலினா ஜோலி – 59 நிமிடங்களிலும் விஜய் – 99 நிமிடங்களிலும் 1 மில்லியன் followers பெற்றதற்காக கூறப்படுகின்றது