இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்ட டெங் போகிங்

சீனாவின் வெளிநாட்டு உதவி நிறுவனமான, சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் தூதுவர் டெங் போகிங் கடந்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வமிக்க பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை டெங் போகிங் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இவ் கலந்துரையாடல் போது அவசர மனிதாபிமான உதவி, திறன் மேம்பாடு, மீனவர்களுக்கான பல்வேறு ஆதரவு, தொடருந்து மேம்பாடு போன்றவற்றில் சீன அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறித்து இதன்போது இலங்கை தரப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு டெங் போகிங் தரப்பில் இருந்து மிகவும் சாதகமான பதில் கிடைத்ததாகவும் இதன் போது தெரியவந்துள்ளது

இந்த டெங் போகிங் உத்தியோகபூர்வமிக்க பயணத்தின் போது, எமது நாடு தொடர்பான பொருளாதார மீட்சி மற்றும் சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான மேம்பாட்டிற்கு உதவும் முக்கியமான பகுதிகள் குறித்த முக்கிய ஒப்பந்தங்களில் இவர்கள் இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன என அறியப்படுகின்றது .

Advertisement

FOR SHOPPING VIST – SANGAPALAKAI.COM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *