இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது .
ஆயினும் தமிழ்நாட்டு அரசாங்க உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளிலும், இலங்கை அரசாங்க நிலைப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடுகால் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இரண்டு தரப்புக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகள் தொடர்பாகவே குறித்த முரண்பாடு நிலவுகிறது. இலங்கையின் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவின் கூற்றுப்படி, ஏப்ரல் 29ஆம் திகதியன்று காரைக்காலுக்கும் காங்கேசன்துறைக்கும் புதுச்சேரி ஊடாக இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமிழக தரப்பில் ராமேஸ்வரத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான வழியே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பின்னர் புதுச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.இன்னும் இந்த வழி யோசனைகள் உறுதி செய்யப்படவில்லை. இந்தநிலையில், இந்த பயணிகள் கப்பல் சேவையை இந்தியாவின் முன்னனி நிறுவனம் அதானி குழுமம் பொறுப்பேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement

FOR SHOPPING VIST – SANGAPALAKAI.COM