கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நாளைய தினத்தோடு (21.04.2023) 4 வருடம் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு நாளைய தினம் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் சிறப்பு ஆராதனையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அமைதி போராட்டம் ஒன்றும் நடைபெறவிருக்கின்றது