கடவுச்சீட்டு தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இந்த வருட ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாத காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகள் சாதாரண மற்றும் ஒருநாள் சேவைகள் ஊடாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிக் கட்டுப்பாட்டு ஊடக பேச்சாளர் ஹன்சிக்கா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கும் அந்த நாடுகளின் தூதரக காரியாலயங்கள் உதவியுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்,சில வேளைகளில் கடவுச்சீட்டு காணாமல் போனால் அதனை விரைவாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

கடவுச்சீட்டானது வழங்கபட்டு ஒரு வருடத்துக்குள் காணாமல் போனதால் அதற்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், கடவுச்சீட்டானது வழங்கபட்டு ஒரு வருடத்தின் பின்னர் காணாமல் போனதால் 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையம் ஊடாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறியப்படுத்தப்படும் என்பதையும் ஹன்சிக்கா குமாரசிங்க குறித்த ஊடக பேச்சில் தெரிவித்து இருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *