ஜனாதிபதி செயலகத்தினால் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விழாவில் சமுர்த்தி ஊழியர்கள் பங்கு பெறுதலை புறக்கணிக்க உள்ளதாக சமுர்த்தி சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.ரனுக்கே இன்று கருத்து வெளியிடுகையில், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வரும் இந்த வேளையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெருமளவு பணத்தை செலவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே நாம் இந்த புத்தாண்டு விழாவில் பங்குகொள்ள போவதில்லை என்றும் இதன்போது அவர் கூறி இருந்தார்