சிங்கப்பூருக்கு சொந்தமான ஓர் விமான நிறுவனமானது விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதனை இந்தியா தமிழகத்தை சேர்ந்த கார்த்திக் ராமசாமி என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்களுடைய விமானத்திற்குள் அறிவிப்புகளை தமிழில் பேசுகிறார்கள்.இதனால் தமிழுக்கு ஓர் பெருமை

ஆனால் இந்தியாவை சேர்ந்த அனைத்து விமான நிறுவனங்களும் இந்தியிலும் , ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மலிவு கட்டணத்தில் விமான சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.