அனைவராலும் பார்க்கப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து கண்ணன் தற்போது விலகபோவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் கண்ணனுடன் குறித்த சீரியலில் ஜோடியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அதாவது இப்பொது சீரியலில் அனைத்து சகோதர்களும் திருமணம் செய்துக் கொண்டு கூட்டுக் குடும்பமாக இருந்த வீட்டில் இருந்து தனித்தனியாக பிரிந்து சென்றுவிட்டார்கள்.இந்த வாரத்தில் முல்லையின் வளைக்காப்பில் நிகழ்ச்சியில்தான் அனைவரும் ஒன்று சேரப்போவதாக மக்களும் பெரிய எதிர்ப்பார்ப்பில் பார்த்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்தின் கடைக்குட்டியான கண்ணன் சீரியலில் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் தான் சீரியலில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக கண்ணன் ஆக நவீன் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.