ஜீ தமிழ் ராக்ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்!

ஜீ தமிழ் (Zee Tamil)தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட சரிகமப என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ராக்ஸ்டார் ரமணியம்மாள் வயது மூப்பால் காலாமானார்.

இவர் சுமார் 43 ஆண்டுகளாக வீட்டு வேலைகள் செய்து தனது காலத்தை கடந்தி வருகின்றாவர்.இவருக்குள் ஒரு பாடும் திறமை இருக்கவே இவரை கூட இருப்பவர்கள் சரிகமப நிகழ்ச்சியில் சேர்த்து விட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இவர் பல எம்.ஜி.ஆரின் பாடல்களை பாடி அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்துள்ளவர்

குறித்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தைப் தன்வசம் ஆக்கிக்கொண்டு பல பரிசில்களையும் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மா என்ற பெயரும் வழங்கப்பட்டது.அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுமார் பத்துக்கு மேற்பட்ட படங்களுக்குப் பாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகாக வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.இந்நிலையில், இன்று தனது வயது மூப்பு காரணமாக தனது 69 வயதில் உயிரிழந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இவரின் இறப்புச் செய்தியை ஜீ தமிழ் (Zee Tamil) மற்றும் சன்(SUN) தொலைக்காட்சி போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *