மட்டக்களப்பு மாவடியோடை பகுதியில் நேற்றைய தினம் (31.03.2023) நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சி செய்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு இராணுவ வீரர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இப் பகுதியானது தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியாகும்.

இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் நேற்றைய தினம் (31.03.2023) விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது .
வெலிக்கந்தை பகுதியில் காணப்படும் இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் பொறுப்பதிகாரி அவரின் கீழ் கடமையாற்றும் இராணுவ லெப்டினன் கேணல் மற்றும் கோப்பிரல், சாஜன் உட்பட இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும் ஓர் பௌத்த தேரர் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்
இதன் போது அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும், இராணுவ வாகனம் ஒன்றும் அவர்கள் இடத்தில் இருந்து விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.