பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன் இன்று (03.04.2023) வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டமானது சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கையினை நிறைவேற்றும் படி பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டம் நடாத்தபடுகின்றது.

இதனால் பிரதேச செயலக ஊழியர்கள் தமது கடமைகளுக்கு செல்ல முடியாமல் வாசலில் காத்து இருகின்றனர். மேலும் இப்பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.