இலங்கையில் எதிர்வருகின்ற மாதங்களில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டில் உள்ள முக்கிய பால் மா இறக்குமதி நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு அனைவரும் தமது ஒப்புதல்களை வழங்கியதாக அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சுக்கு கிடைக்க உள்ளதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.