இன்றைய காலக்கட்டத்தில் அதிக பிரச்சினை மற்றும் அதிக மின் கட்டணம் காரணமாக மின் விசிறிகளை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்து வைத்துள்ள அறைகளில் அனைவரும் உறங்குகின்றனர் இதனை சாதகமாக பயன்படுத்தி பல தவறான செயல்கள் எமது நாடுகளில் நடந்தவண்ணம் உள்ளது
இதில் தற்போது எலஹெர சருபிம கிராமத்தில் மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள் உறங்கி கொண்டு இருக்கும் அறைகளில் அவர்களுக்கு தெரியாமல் ஜன்னல்களில் இருந்து புகைபடம் எடுப்பதாக அந்த கிராமத்து மக்கள் அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் வீடு ஒன்றிற்குள் நுழைந்து பெண் ஒருவரை புகைப்படம் எடுத்த போது, வீட்டு உரிமையாளரும் கிராமத்து மக்களும் பிடிக்க முற்பட்ட போதிலும் அந்த நபர் தப்பித்து சென்றுவிட்டார்
குறித்த பிரதேசத்தில் மேலும் இதுபோன்ற தவறான விடயங்கள் நடந்தவண்ணமே உள்ளது எனவும் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டவண்ணமும் உள்ளனர் என தெரிய வந்துள்ளது