யாழ்ப்பாணம் மீசாலை எனும் பகுதியில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த சம்பவம் ஆனது ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 43 வயது மிகுந்த ஒருவரே நேற்று (11) மாலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் அடைந்த நபர் மருத்துவமனை ஒன்றில் கடமை ஆற்றும் ஒருவர் எனவும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தெல்லிப்பழை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும் குறித்த கொலையில் மரணம் அடைந்தவர்க்கும் இடையில் ஏற்கனவே சில வகையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும் . குறித்த முரண்பாடுகள் காரணமாகவே குறித்த மருத்துவமனை ஊழியர் இவ்வாறு குத்தி கொலை செய்யப்பட்டுள்ளமை என பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது சாவகச்சேரி பொலிசாரின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement

FOR SHOPPING VIST – SANGAPALAKAI.COM