யாழ்ப்பாணத்தில் தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது .

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்கு கோவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதால் குறித்த நபருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதனை அடுத்து பரிசோதனையின் முடிவில் குறித்த நபருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைகளை பெற்று வந்தவர்களுக்கும் கோவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டபோது அதிலும் சிலர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இப்போது தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.