யாழ்ப்பாணம் சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துள்ளார் என ஊடக துறைக்கு வட்டுக்கோட்டை பொலிஸார் தகவல் வழங்கி உள்ளனர்.
குறித்த இந்த சம்பவமானது நேற்று (01.04.2023) இடம் பெற்றுள்ளதாகவும் அது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இதன் போது குறிப்பிட்டுள்ளார் .

சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியியை சேர்ந்த , 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.