யாழில் போலி வைத்தியர் பொதுமக்களை பலர் ஏமாற்றம்….!

கடந்த சில காலமாக போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக பலராலும் எச்சரிக்கப்பட்ட ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

அன்மையில் யாழ்ப்பாணத்தில் கதிர்வேலு ரகுராம் என்ற போலி வைத்தியர், போலியான சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வந்து அங்கு பல நோயாளிக்கு அக்குபஞ்சர் வைத்தியமளிக்கபட்டது. ஆனால் குறித்த வைத்திய நிலையமானது உரிய பதிவுகளை பெற்ற வைத்திய நிலையமாக இயங்கவில்லை எனவும் பலரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிலர் மரணமடைந்ததை தொடர்ந்து எந்த வித பதிவுகளும் வெளியாகவில்லை. எனவே அந்த மரணங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, இந்த போலியான வைத்தியமே குறித்த மரணங்களுக்கு காரணம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தது.

போலி வைத்திய நிலையத்தை நடத்துயது மட்டுமல்லாமல், ஆங்கில வைத்தியம் தொடர்பிலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராகவும் முரணான கருத்துக்களை பரப்பி உள்ளார்

மேலும் இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உரும்பிராயில் போலி வைத்தியம் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக விழிப்புணர்வு பதிவொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

நேற்றய தினம் யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முறைப்பாட்டையடுத்து கதிர்வேலு ரகுராம் அவரை கோப்பாய் பொலிஸார் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

ஆங்கில வைத்திய முறைக்கு எதிரான போலித் தகவல்களை பரப்புவது, வைத்தியர்களுக்கு எதிரான அவதறு பரப்புவது போன்றவற்றிற்கு நீதிபதி கடுமையான எச்சரிக்கை செய்து பிணையில் விடுவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *