வருமான வரி அறவீடு தொடர்பாக தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஓர் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.அதாவது 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருட வருமானத்தை ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது..

இதில் வர்த்தகர்கள், வாடகை வருமானம் ஈட்டுவோர், முதலீடுகளின் மூலமான வட்டி ஊடாக வருமானம் பெறுபவர்கள் அல்லது தொழில் மூலம் சம்பளம் பெறுவோர் உள்ளிட்ட தரப்பினர் இவ்வாறு வரி செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்த வேண்டியது அணைத்து மக்களினதும் கடப்பாடு ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் உரிய தொகை வருமான வரியை செலுத்துமாறு தேசிய இறைவரித் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.தவறும் பச்சத்தில் குறித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும்.