பாரிஸ் மக்கள் மத்தியில் வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்ய வேண்டுமென பெரும்பாலானவர் வாக்களித்துள்ளனர்.பிரான்ஸ் இன் தலைநகரான பாரிஸ் தெருக்களில் வாடகைக்கு மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதை தடை செய்ய வேண்டும் என்று பாரிஸ் வாழ்மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாக்களித்தனர்.

இந்த வாக்குப்பதிவு முடிவில் மின்-ஸ்கூட்டர்களுக்கு எதிராக 90 சதவீத வாக்குகள் பிரச்சாரகர்கள் வெற்றியை அடைந்தார்கள் எனினும் இது வாடகை மின்-ஸ்கூட்டர்களை நடத்துபவர்களுக்கு மிகவும் கவலை மிகுந்த விடயமாக மாறியது.
ஐரோப்பாவில் இவ்வாரு மின்-ஸ்கூட்டர்களை தடை செய்யும் ஒரு முதல் தலைநகராக பாரிஸ் தற்போது மாறவுள்ளது