தமிழ் திரைஉலகில் சிறந்த நடிகரான ஒருவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன் திரைப்படம் அடுத்ததாக திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பல மக்களுக்கும் குறிப்பாக மாற்று திறனாளிக்கும் பல தன்னால் உதவிகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் கல்லூரி மாணவன் ஒருவர் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் உயிருக்காக போராடியிருக்கிறார்.மற்றும் அம் மாணவனுக்கான மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த அந்த தாயின் நிலைமையை பிரபல பத்திரிகையாளர் மூலம் அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் உடனடியாக அவருக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார்.
அதன்பின், விபத்தில் சிக்கிய மாணவனின் மருத்துவ செலவை அனைத்தையும் தானே செலுத்தி அந்த மாணவனின் உயிரையும் காப்பற்றியுள்ளார்.