புதிய தொழில்நுட்பமாக தற்போது உலகையே ஆட்டி போடும் சட் ஜிபிடியைத் (ChatGPT) தடை செய்துள்ள முதல் நாடாக இத்தாலி ஆகியுள்ளது
சட் ஜிபிடி (Chat GPT) ஆனது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.மேலும் இதனை மற்றொரு தேடு பொறி என்றும் தற்போது பேசப்படுகின்றது.

இந்நிலையில், சட் ஜிபிடியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக இத்தாலிய தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால் ஓபன்ஏஐயின் சட் ஜிபிடியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசாரணை நடத்தப்படுவதாக இத்தாலியின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.